இம்பால்: தங்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க வங்கி கிளையில் போதிய பணம் கையிருப்பு இல்லை என்ற காரணத்தால், வாடிக்கையாளர்கள் வங்கி கிளையை சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்று அமைந்துள்ளது. அந்த கிளையில் இன்று காலை வாடிக்கையாளர்கள் இருவர் தங்களது வங்கிக்கணக்கிலிருந்து, ஒருவாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவான ரூ.24 ஆயிரத்தை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு அனுமதி இல்லை; போதிய பணமுமில்லை என்று வங்கி ஊழியர்கள் கூறியதால் அங்கே கைகலப்பு மூண்டது. இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார்.
இதே போல் மேற்கு இம்பாலில் உள்ள, லெமாக்ஹோங்கில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்றில் வங்கி ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே உருவான தகராறில் வங்கியின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


