பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

காஷ்மீரில் ராணுவ ஹெலிபேட் அருகே சுற்றித் திரிந்த பாகிஸ்தான் நபர் கைது!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள ராணுவ ஹெலிகாப்டர் தளத்தின் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நோட்டமிட்ட பாகிஸ்தான்... 

News image
Updated On :2 அக்டோபர் 2016, 11:32 am

DIN

ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள ராணுவ ஹெலிகாப்டர் தளத்தின் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நோட்டமிட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை ராணுவத்தினர் பிடித்து, விசாரணை செய்து வருகின்றனர்.

ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள அக்ரேசக் கிராமம். இங்கு இந்திய ராணுவத்திற்கு சொந்தமான 'விக்ரமன்' என்னும் ராணுவ ஹெலிகாப்டர் தளம் உள்ளது. இதன் அருகே சனிக்கிழமை நேற்றிரவு சந்தேகத்துக்குரிய வகையில் மர்ம நபர் ஒருவன் சுற்றித்திரிந்தான். அவனைப் பிடித்துவிசாரித்ததில்  பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது.

முதல்கட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் அபுபக்கர் சுஹாக் என்றும் பாகிஸ்தானில் உள்ள அஸ்ட்டிலியா கிராமத்தை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. ராணுவத்தினர் தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.