பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

காவிரி பாசன பகுதிகளை ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைப்பு!

காவிரி பாசன பகுதிகளிலுள்ள நீர் இருப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

News image
Updated On :5 அக்டோபர் 2016, 2:31 pm

DIN

புதுதில்லி: காவிரி பாசன பகுதிகளிலுள்ள நீர் இருப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, காவிரி பாசன பகுதிகளில் உள்ள நீர் அளவை ஆய்வு செய்ய வேண்டும் என கர்நாடகா கோரிக்கை வைத்தது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அமித் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஆய்வு குழுவை உடனடியாக அமைக்க உத்தரவிட்டது. மேலும் 17ம் தேதி அன்று இது குறித்த தகவலை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தொழில்நுட்ப ஆய்வு குழுவை இன்று அமைத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

மத்திய நீர்வள ஆணையத்தின் கமிஷனர், ஜி.எஸ்.ஷா, இந்த குழுவின் தலைவராக செயல்படுவார். மத்திய நீர்வள ஆணையத்தை சேர்ந்த மசூத் ஹுசைன், கிருஷ்ணா -கோதாவரி பாசன அமைப்பின் தலைமை பொறியாளர் ஆர்.கே.குப்தா ஆகிய இருவரும் இந்த குழுவில் உறுப்பினர்கள் ஆவார்கள்.

மேலும் தமிழகம், கர்நாடக மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் அல்லது அவர்கள் நியமிக்கும் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம் பிடிப்பார்கள். தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களும், தங்கள் சார்பில் ஒரு தலைமை இன்ஜினியரை குழுவில் இடம்பெற அனுப்ப வேண்டும். இக்குழுவில் இடம் பிடிப்போர், நாளை பெங்களூர் வந்து சேர வேண்டும். குழுவின் முதல் ஆயத்த கூட்டம் வெள்ளியன்று காலை பெங்களூரில் நடைபெறும்.

இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.