மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ரூ.259 க்கு 10 ஜிபி டேட்டா: ஏர்டெல்லின் 'அடடே' அறிவிப்பு!

புதிதாக 4 ஜி மொபைல் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 259 ரூபாய் கட்டணத்தில் 10 ஜிபி டேட்டாவை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2016, 3:06 pm

DIN

மும்பை: புதிதாக 4 ஜி மொபைல் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 259 ரூபாய் கட்டணத்தில் 10 ஜிபி டேட்டாவை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் வருகையால் ஆடிப்போயுள்ள ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க நாள்தோறும் புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்று ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி புதிதாக 4 ஜி மொபைல் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 259 ரூபாய் கட்டணத்தில் 10 ஜிபி டேட்டாவை வழங்கபப்டும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

4ஜி மொபைல் வைத்திருப்பவர்கள் 259 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அவர்கள் அக்கவுண்டில் 1 ஜிபி கிரெடிட் ஆகும். மீதமுள்ள 9 ஜிபியை மை ஏர்டெல் ஆப் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த டேட்டா 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த சேவையை மூன்று மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.

தற்பொழுது வரைகுஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டும்தான் இந்த சேவை வழங்கப்பட்டு  வந்தது. தற்போது இந்த சேவையானது நாடு முழுவதும் வழங்கப்பட உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.