மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உதய் மின் திட்டத்தில் இணைகிறது தமிழக அரசு: பியூஷ் கோயல் தகவல்  

உதய்  மின் திட்டத்தில் இணைந்து கொள்ள தமிழக அரசு விருப்பம் தெரிவித்து உள்ளதாக மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 அக்டோபர் 2016, 12:31 pm

DIN

புதுதில்லி: உதய்  மின் திட்டத்தில் இணைந்து கொள்ள தமிழக அரசு விருப்பம் தெரிவித்து உள்ளதாக மத்திய மின்சாரத்துறைஅமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார்.

மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தில்லியில் இன்று மாலை  சந்தித்து பேசினார்.

அப்பொழுது அவர் மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழகம் சேருவது குறித்து ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய உதய் திட்டம் என்பது, பல்வேறு மாநிலங்களில் உள்ள நலிவுற்ற மின் விநியோக நிறுவனங்களை மேம்படுத்த உதவுவதே ஆகும்.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில், மின் விநியோக நிறுவனம் கடனில் இருந்தால் அதில் 75 சதவீதத்தை மாநில அரசு ஏற்க வேண்டும்.

மின் விநியோக நிறுவனங்களும் 25 சதவீத கடன் பத்திரங்களை அளித்து, 3 மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்வது, நிர்வாகத் திறனை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்துவது என உதய் திட்டத்தின் சாராம்சங்கள் அமைந்துள்ளன.

இந்த நிலையில் கூட்டம்முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல் உதய் மின் திட்டடத்தில் இணைந்து கொள்ள தமிழக அரசு விருப்பம் தெரிவித்துள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.