மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பிகாரில் கனமழை: தண்ணீரில் தத்தளிக்கும் வீடுகள்

பிகார் மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 செப்டம்பர் 2016, 9:34 am

கயா: பிகார் மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது பெய்துவரும் கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 238 மி.மீ மழை பெய்துள்ளது. கயாவில், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் நீர் வடியாததால் வாகனங்கள் செல்ல முடியாமல் நீரில் மூழ்கியுள்ளது.

பிகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்குக் கனமழை அல்லது மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.