ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வன்முறை சாமான்யர்களை பெரிதும் பாதிக்கும்: வெங்கையா நாயுடு வேதனை

வன்முறை சம்பவங்கள், நாட்டின் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பதோடு மட்டும் அல்லாமல் சாமான்ய மக்களை பெரிதும் பாதிக்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :13 செப்டம்பர் 2016, 7:27 am


புது தில்லி: வன்முறை சம்பவங்கள், நாட்டின் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பதோடு மட்டும் அல்லாமல் சாமான்ய மக்களை பெரிதும் பாதிக்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி விவகாரம், தமிழகம் - கர்நாடக மாநிலங்களின் அமைதியை சீர்குலைத்துள்ளது. வன்முறையை எப்போதும் எந்த வடிவிலும் ஏற்க முடியாது.

வன்முறைச் சம்பவங்களால் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுவதோடு, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, சாமான்ய மக்களை பெரிதும் பாதிக்கிறது.

இரு மாநிலங்களின் நிலையையும் நன்கு ஆராய்ந்தே உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பினை அளித்துள்ளது. தீர்ப்பினை எதிர்த்து மாநில தலைவர்கள்தான் நீதிமன்றத்தை நாட வேண்டும்.

அமைதியை சீர்குலைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் இரு மாநில மக்களும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஊடகங்களும் இது குறித்த செய்திகளை வெளியிடும் போது கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். ஒரு வகையில் வன்முறைச் சம்பவங்களை பெரிதுபடுத்தி செய்தி வெளியிடுவதும் வன்முறையைத் தூண்டுவதற்கு ஒப்பானதே என்றும் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.