அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:34 pm

DIN

வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்துள்ளது.
'ரெப்போ விகிதம்' என்றழைக்கப்படும் இந்த வட்டி விகிதம் 10 மாத இடைவெளிக்குப் பிறகு குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, இந்த விகிதம் 6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது, கடந்த ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் குறைவானதாகும்.
இதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளிக்கும் வீட்டுக் கடன், வாகனக் கடன், நிறுவனக் கடன் போன்றவற்றுக்கான வட்டி விகிதமும் குறைவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) மும்பையில் புதன்கிழமை நடத்திய நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறியதாவது:
தற்போதைய பொருளாதாரச் சூழலில், வட்டி விகிதங்களைக் குறைப்பதால் பணவீக்கம் அதிகரிப்பதற்கான அச்சுறுத்தல் குறைவாகவே உள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு, ரெப்போ வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது.
வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவை வரவேற்றுள்ள மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க், மிதமான பணவீக்கத்துக்கும், நிலையான வளர்ச்சிக்கும் இந்த முடிவு வழிவகுக்கும் என்றார்.
எனினும், ரெப்போ வட்டி விகித மாற்றத்தை உடனடியாகப் பிரதிபலிக்கக் கூடிய மும்பை பங்கு வர்த்தகம் புதன்கிழமை 98.43 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்கு சந்தையின் நிஃப்டியும் 33.15 புள்ளிகள் குறைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.