சண்டிகர்: தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவிகளின் ஆடையை நீக்கச் செய்து ஆசிரியை ஒருவரே தண்டனை அளித்த விவகாரம், ஹரியானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் லாந்துராவில் ஜே.பி. சர்வதேச பள்ளி என்னும் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இங்கு நடந்த ஆங்கில தேர்வு ஒன்றில், ஆறாம் வகுப்பு மாணவிகள் இருவர் மிகக் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இருவரையும் ஆசிரியை ஒருவர் மோசமாக திட்டி உள்ளார்.
பின்னர் இரு மாணவிகளை வகுப்பறையில் அவர்களது ஆடைகளை களையச் செய்து துன்புறுத்தி உள்ளார். கடந்த ஓன்றாம் தேதியன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளியில் நேர்ந்த சம்பவத்தை தற்பொழுது பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். குறிப்பிட்ட ஆசிரியை மீது தற்பொழுது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாளை. அருகே பைக் திருடியவா் கைது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


