திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

குஜராத்தில் மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்: 3 வேட்பாளர்களின் வெற்றி உறுதி: பாஜக

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கும் 3 பேரும் குறிப்பிடத்தக்க வாக்குகள் வித்தியாசத்தில்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:36 pm

DIN

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கும் 3 பேரும் குறிப்பிடத்தக்க வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று அக்கட்சியின் மாநில மேலிடப் பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆமதாபாதில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக வேட்பாளர்களுக்கு, வெற்றிக்கு தேவையான வாக்குகளைக் காட்டிலும் கூடுதலாக 3 வாக்குகள் கிடைக்கும். இதனால், பாஜக வேட்பாளர்கள் நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். எங்களது கணக்கு எப்போதும் தவறாது.
கருத்து வெளியிடும் உரிமை தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் காங்கிரஸ் தகர்த்து விட்டது. குஜராத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, தொகுதியில் இருக்காமல், பெங்களூருக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் அக்கட்சியால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பெங்களூரில் இருந்து குஜராத்துக்கு அவர்கள் மீண்டும் திரும்பி வந்தபோதும், தொகுதி பக்கமோ, தங்களது குடும்பத்தினருடன் ராக்கி பண்டிகையை கொண்டாடவோ, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனுமதிக்கப்படவில்லை. சிறைக் கைதிகள் போல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் பூபேந்திர யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.