திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 6 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

திரிபுரா மாநிலத்தில் மாணிக் சர்க்காரை முதல்வராக கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:37 pm

DIN

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் மாணிக் சர்க்காரை முதல்வராக கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுதிப் ராய் பர்மன் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் சமீபத்தில் நடைபெற்று முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக ஆதரவு வேட்பாளருக்கு வாக்கு அளித்ததால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 6 எம்எல்ஏக்களும் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாஜகவில் முறைப்படி இணைந்தனர். அவர்களுடைய ஆதரவாளர்கள் 25 ஆயிரம் பேரும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், மாணிக் சர்க்கார் அரசை அகற்ற முழுமுயற்சி எடுப்போம் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.