

சென்னை: மழை வெள்ளம் என்றதும் நமக்கு இப்போது வேண்டுமானால் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நினைவுக்கு வரலாம்.
ஆனால், ஆண்டுதோறும் நாம் பருவ மழைக் காலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை வசதியாக மறந்து விட முடியாது.
மழையால் ஏற்பட்ட வெள்ளம் ஆண்டுதோறும் நம்மை ஆட்கொண்டாலும், டிசம்பர் 2015 வெள்ளம் சில பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் ஏற்பட்ட வெள்ளம் என்பதால் நம்மை படுபாதாளத்தில் விட்டுச் சென்றதுதான் சோகம்.
கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வெனிஸ் நகரமாக மாறியது மும்பை.
பெங்களூருவை எடுத்துக் கொண்டால், 4 மணி நேரத்தில் பெய்த கன மழை காரணமாக நகரமே வெள்ளக்காடானது. இந்த பருவ மழை காலத்தில் மட்டும் 3 முறை பெங்களூரு மாநகரம் வெள்ளத்தில் மிதந்தது. மழைநீர் வடிகால்வாய்கள் சரிவர பராமரிக்கப்படாததும், மழை நீர் வெளியேறும் பகுதிகள் ஆக்ரமிப்பாளர்களால் கையகப்படுத்தப்பட்டதுமே இதுபோன்ற வெள்ளத்துக்குக் காரணம்.
ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரும் இதில் தப்பவில்லை. கன மழை காலத்தில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி மழை நீர் ஓடி வந்து புவனேஸ்வரில் வடியும் வகையில் அதன் புவியமைப்பு அமைந்திருந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நகரம்தான் இயற்கை மழை நீர் வடிகாலாக இருந்தது. ஆனால், 186 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட புவனேஸ்வர் தற்போது கான்கிரீட் காடாக மாறிவிட்டது. புவனேஸ்வர் நகரில் இருந்த அனைத்து இயற்கை வடிகால்களும் ஆக்ரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டுவிட்டது.
இதுபோன்று திட்டமிட்டு மக்கள் செய்த பல காரியங்கள்தான் இன்று எத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் மழை வெள்ளத்தில் இருந்து பெரும் மாநகரங்களைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கிறது.
தரைப்பாலங்கள் அடித்துச் செல்வதும், மேம்பாலங்களை மூழ்கடிக்கும் வெள்ள நீரும் நமக்கு ஆண்டுதோறும் பழகிப் போகும் அளவுக்கு, வடிகால் அமைப்புகளை நாம் கொன்று புதைத்துள்ளோம்.
மழை மட்டுமே காரணமல்ல.. மக்கள் தொகை அதிகரிப்பும், புறநகரப் பகுதிகளின் அசுர வளர்ச்சியும் வெள்ளத்துக்கு மறைமுகக் காரணங்களாக அமைந்துள்ளன.
சென்னையின் வரலாற்றை புரட்டிப் பார்க்கலாமா
சென்னையில் மக்கள் தொகை
1971ம் ஆண்டில் - 30 லட்சம்
தற்பொழுது - 1 கோடி
தற்போது சென்னையில் ஒரு சதுர அடிக்கு 26,553 பேர் வீதம் வசிக்கிறார்கள்.
2000ஆவது ஆண்டுக்குப் பிறகு ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை அளவு:
அக்டோபர் 27, 2005: 423 மி.மீ.
டிசம்பர் 2, 2015 : 294 மி.மீ.
நவம்பர் 23, 2015 : 246 மி.மீ.
டிசம்பர் 3, 2005 : 234 மி.மீ.
அக்டோபர், 18, 2014 : 162 மி.மீ.
பசுமைப் பரப்பு
1970 : 18%
தற்பொழுது : 6%
ஏரிகளின் எண்ணிக்கை
1970 : எண்ணிக்கைக் கிடைக்கவில்லை
தற்பொழுது : 200
வெள்ளத்துக்குக் காரணமாக அமையும் 5 விஷயங்கள் :
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.