புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

'ராகுல் போபியா'வால் பாதிக்கப்பட்டுள்ள மோடி: காங்கிரஸ் கடும் தாக்கு! 

பிரதமர் மோடி 'ராகுல் போபியா'வால் பாதிக்கப்பட்டு கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :4 டிசம்பர் 2017, 8:06 am

புதுதில்லி: பிரதமர் மோடி 'ராகுல் போபியா'வால் பாதிக்கப்பட்டு கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், அக்கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி மனுத்தாக்கல் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியதாவது:

ஏன் பிரதமர் மோடி 'ராகுல் போபியா'வால் பாதிக்கப்பட்டுள்ளார்? ஏன் இத்தனை மன அழுத்தத்தில் இருக்கிறார்? அக்கட்சியின் ஊழல் பேர்வழிகளோடு அவருக்குள்ள நெருக்கம் அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால் அதே நேரம் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அருண் ஷோரி, யஸ்வந்த் சின்ஹா மற்றும் சத்தருகன் சின்ஹா ஆகியோரின் கேள்விகளுக்குஅவர் எப்போது பதில் அளிக்கப் போகிறார்?

அதேபோல் கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி,முரளி மனோஹர் ஜோஷி ஆகியோருக்கு எதிராக அவரும், அமித் ஷாவும் சேர்ந்து செய்த சதிகளைக் குறித்தும் அவர் வெளிப்டையாகப் பேச வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.