புதுதில்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி 1998-ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். இதன் மூலம் நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தவர் என்ற பெருமைக்கு உரியவராக உள்ளார்.
அவருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அக்கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். தற்பொழுது மேலும் உடல் நல பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சோனியா காந்தி, கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வளவாக கலந்து கொள்வதில்லை. எனவே ராகுல் காந்தி அக்கட்சித் தலைவராக விரைவில் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று கூறப்பட்டது.
அதன் முதல் படியாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மனுதாக்கல் நிகழ்ச்சியின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் கமல்நாத், மோதிலால் வோரா, ஷீலா தீக்ஷித், அஹமது படேல் மற்றும் அசோக் கெலாட் போன்றோர் உடன் இருந்தனர்.
மனுத் தாக்கலுக்குப் பிறகு தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் வாழ்த்துக்களை ராகுல் காந்தி பெற்றுக் கொண்டார். வேறு யாரும் மனுத் தாக்கல் செய்ய மாட்டார்கள் என்பதால் ராகுலின் வெற்றி உறுதியான ஒன்றாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
7 பேரும் துரோகிகள்! விவசாயிகள் மரணத்திற்குக் காரணமான கட்சியில் இணைந்துள்ளனர்!

வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


