முஸாபார்நகர்: உத்தரப் பிரதேசத்தில் கணவன் வீட்டில் திருடிய புதுமணப்பெண் கைது செய்யப்பட்டுள்ள விநோத சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் முஸாபார்நகர் மாவட்டம் காக்டா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, அதே ஊரைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணுடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடந்துள்ளது.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, கடந்த அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி அன்று ஜோதி தனது கணவன் இல்லத்தில் இருந்து, ரூ.70000 ரொக்கம் மற்றும் தங்க நகைகளை திருடிக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஜோதியை போலீசார் வலை வீசித் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஜோதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏமாற்றுதல் மற்றும் திருட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


