சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

மத்தியப் பிரதேச வனப் பாதுகாவலர் பணி: பெண்களுக்கு மார்பளவு நிர்ணயித்து சர்ச்சை

மத்தியப் பிரதேச வனப் பாதுகாவலர் காலிப் பயணியிடம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் பெண்களுக்கான பிரத்தியேக உடல் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2017, 10:50 am

மத்தியப் பிரதேசத்தில் வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறை அதிகாரிக்களுக்கான காலிப்பணிடங்கள் தொடர்பான வேலைவாய்ப்பு குறித்து பிஎஸ்சி-யில் விளம்பரம் வெளியானது.

அதில், ஆண்களைப் போன்று பெண்களுக்கும் மார்பளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இதுபோன்ற காவல் சார்ந்த பணிகளுக்கு ஆண்களுக்கென பிரத்தியேக உடல் அளவு நிர்ணயிக்கப்படுவது தான் வாடிக்கை.

ஆனால் இம்முறை அதேபோன்று பெண்களுக்கும் அங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வகையில், பெண்களுக்கான மார்பளவு 74 செ.மீ., விரிந்த நிலையில் 79 செ.மீ. இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த உடல்தகுதியில் தோல்வியுற்றால் அவர்கள் எழுத்துத் தேர்வில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ம.பி. வனத்துறையின் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான செய்திக்குறிப்பு அப்பகுதி பெண்களிடையே அதிர்ச்சியை மட்டுமல்லாமல் எதிர்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.