அதிநவீன இடைமறி ஏவுகணைச் சோதனை வெற்றி
எதிரிகளின் சக்திவாய்ந்த ஏவுகணைகளை நடுவழியில் இடைமறித்து அழிக்கும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.


எதிரிகளின் சக்திவாய்ந்த ஏவுகணைகளை நடுவழியில் இடைமறித்து அழிக்கும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
ஒடிஸா மாநிலம், பாலாசோரில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் (வீலர் தீவு) இருந்து வியாழக்கிழமை இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒலியைவிட வேகமாகச் செல்லும் இந்த அதிநவீன சூப்பர்சானிக் இடைமறி ஏவுகணைச் சோதனை, நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
பாலாசோர் அருகே சாந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து இடைமறித்து அழிக்கப்பட வேண்டிய பிருத்வி ஏவுகணை செலுத்தப்பட்டது. அது தரையிலிருந்து 30 கி.மீ. உயரத்துக்கு செல்வதற்கு முன் அப்துல் கலாம் தீவிலிருந்து செலுத்தப்பட்ட அதிநவீன ஏவுகணை, ரேடாரில் கிடைக்கப்பெற்ற சிக்னலைக் கொண்டு பிருத்வியை இனம் கண்டு அழித்தது.
7.5 மீட்டர் நீளம் கொண்ட அதிநவீன இடைமறி ஏவுகணை பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 11, மார்ச் 1 ஆகிய தேதிகளில் இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...