புது தில்லி: சமூக ஆர்வலர் கைலாஷ் சத்தியார்த்திக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு சான்றிதழை கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை இரவு இந்த கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பதாக வித்தியார்த்தியின் மகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் நடந்த போது, தனது பெற்றோர் வீட்டில் இல்லை என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அலக்நந்தா பகுதியில் உள்ள ஆரவல்லி குடியிருப்பில் உள்ள வித்தியார்த்தியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், நோபல் பரிசு சான்றிதழுடன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
2014ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு கல்வி அளிக்க போராடி வந்த கைலாஷ் சத்தியார்த்தியும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவும் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


