தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

நாளை ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட்: 28 நிமிடங்களில் 104 செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தத் திட்டம்

பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் புதன்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது. இதில், 104 செயற்கைக்கோள்களை 28 நிமிடங்களில் விண்வெளியில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

News image

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் வைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோளும், பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட்டும்.

Updated On :13 பிப்ரவரி 2017, 6:51 pm

பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் புதன்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது. இதில், 104 செயற்கைக்கோள்களை 28 நிமிடங்களில் விண்வெளியில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து புதன்கிழமை காலை 9.28 மணிக்கு விண்ணில் பிஎஸ்எல்வி சி-37 செலுத்தப்படுகிறது. 28 நிமிடங்கள் 42.80 விநாடியில் விண்வெளிப் பாதையில், 104 செயற்கைக்கோள்களும் 505 கி.மீ. தூரத்துக்குள்ளாக விண்வெளிப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.
பிஎஸ்எல்வி வரிசையில்...: பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் 39-ஆவது ராக்கெட் இதுவாகும்.
714 கிலோ எடைகொண்ட கார்டோசாட் வரிசையில் 2-ஆவது செயற்கைக்கோளையும் சுமந்துச் செல்கிறது.
பூமியை படமெடுக்கவும், கடல் வழிப் போக்குவரத்தைக் கண்காணிக்கவும், நீர்வள மேம்பாட்டுக்கும், காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கவும் கார்டோசாட் 2 செயற்கைக்கோள் உதவும். இந்தியாவின் இரண்டு நானோ செயற்கைக்கோள்களான ஐ.என்.எஸ் 1ஏ, ஐ.என்.எஸ்.1பி ஆகியனவும் இதில் அடங்கும். இத்துடன் இணைந்து 664 மொத்த எடை கொண்ட மற்ற நாடுகளின் 101 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளன.
இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் தலா ஒரு நானோ செயற்கைக்கோளும் மேலும் அமெரிக்காவில் இருந்து மொத்தம் 96 நானோ செயற்கைக்கோள்களும், இந்தியாவின் இரண்டு நானோ செயற்கைக்கோள்களுடன் பயணிக்க உள்ளது பிஎஸ்எல்வி சி 37 ராக்கெட்.
"கவுன்ட் டவுன்' தொடங்கியது: பிஎஸ்எல்வி சி 37 ராக்கெட்டுக்கு எரிபொருள்கள் நிரப்பும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் 48 மணி நேர கவுன்ட் டவுன் திங்கள்கிழமை காலை 9.28 மணிக்கு தொடங்கியது.
இதற்கு முன்பு 2014-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 37 செயற்கைக்கோள்களை ரஷ்யா செலுத்தியது தான் இப்போதைய சாதனையாக இருக்கிறது.
இதுவரை பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் பயணம் !
இஸ்ரோ முதன் முதலாக 1993-ஆம் ஆண்டு The Polar Satellite Launch Vehicle  பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் ஐ.ஆர்.எஸ்-1 இ என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. இது தோல்வியில் முடிந்தது. அதன்பின் அனுப்பிய பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. இஸ்ரோ புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பவுள்ளது 39-ஆவது பி.எஸ்.எல்.வி. வரிசை ராக்கெட்டாகும்.

Story image


1993, செப்.20 ஐ.ஆர்.எஸ்-1இ தோல்வி
1994, அக்.15 ஐ.ஆர்.எஸ்-பி2 வெற்றி
1996, மார்ச் 21 ஐ.ஆர்.எஸ்-பி3 வெற்றி
1997, செப்.29 ஐ.ஆர்.எஸ்-1டி பாதி வெற்றி
1999, மே 26 ஓசன்சாட்-1, கிட்சாட்-3, டூப்சாட் வெற்றி
2001, அக்.22 டி.இ.எஸ் வெற்றி
2002, செப்.12 கல்பனா-1 (மெட்சாட்) வெற்றி
2003, அக்.17 ரிசோர்ஸ்சாட்-1 (ஐ.ஆர்.எஸ்-பி6) வெற்றி
2005, மே 5 கார்டோசாட்-1, ஹாம்சாட் வெற்றி
2007, ஜன.10 கார்டோசாட்-2, எஸ்.ஆர்.இ.-1,
லபான் டூப்சாட், பெகியூன்சாட்-1 வெற்றி
2007, ஏப்.23 ஏஜைல் வெற்றி
2008, ஜன.21 டெக்சார் வெற்றி
2008, ஏப்.28 கார்டோசாட்-2ஏ, ஐ.எம்.எஸ்.1,
8 நானோ செயற்கைக்கோள்கள் வெற்றி
2008, அக்.22 சந்திராயன்-1 வெற்றி
2009, ஏப்.20 ரிசாட்-2, அனுசாட் வெற்றி
2009, செப்.23 ஓசன்சாட்-2, ஆறு நானோ
செயற்கைக்கோள்கள் வெற்றி
2010, ஜூலை 12 கார்டோசாட்-2பி, அல்சாட்-2ஏ,
என்.எல்.எஸ் 6.1, ஸ்டுட்சாட் வெற்றி
2011, ஏப்.20 ரிசோர்ஸ்சாட்-2, யூத்சாட்,
எக்ஸ் சாட் வெற்றி
2011, ஜூலை 15 சிசாட்-12 வெற்றி
2011, அக்.12 மேகா-ட்ராப்கியூஸ், எஸ்.ஆர்.எம்.சேட்,
வெசல்சேட், ஜூக்னு வெற்றி
2012, ஏப்.26 ரிசாட்-1 வெற்றி
2012, செப்.9 ஸ்பாட் 6 மற்றும் புரோடெரஸ் வெற்றி
2013, பிப்.25 சரல் மற்றும் 6 செயற்கைக்கோள்கள் வெற்றி
2013, ஜூலை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ வெற்றி
2013, நவ.5 செவ்வாய்க்கு விண்கலம் வெற்றி
2014, ஏப்.4 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி வெற்றி
2014, ஜூன் 30 ஸ்பாட் 7, கனடா எக்ஸ் 4,
கனடா எக்ஸ் 5, எய்சாட், வெலக்ஸ் வெற்றி
2014, அக்.15 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி வெற்றி
2015, மார்ச் 28 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி வெற்றி
2016 ஜன.20 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1 இ வெற்றி
2016 மார்ச் 19 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.- 1எஃப் வெற்றி
2016 ஏப்ரல் 28 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி வெற்றி
2016 மே 23 ஆர்.எல்.வி.டிடி வெற்றி
2016 ஜூன் 22 கார்டோசாட் 2 வெற்றி
2016 செப்.26 ஸ்காட்சாட் வெற்றி
2016 டிச.15 ரிசோர்ஸ்சாட் வெற்றி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.