தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

புத்தாண்டு அன்று பெங்களூரு பெண் பலாத்கார விவகாரம்: நான்கு பேர் கைது!     

புத்தாண்டு தினத்தன்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற விவகாரத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2017, 6:56 am

பெங்களூரு: புத்தாண்டு தினத்தன்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற விவகாரத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் கம்மனஹள்ளி பகுதியில் புத்தாண்டு தினத்தன்று கொண்டாடட்டங்கள் முடிந்து வீடு திரும்பிய இளம்பெண் ஒருவரை மது போதையில் வாலிபர்கள் இருவர் பலாத்காரம் செய்ய முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது.

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர் நேற்று ஏழு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பனசாவடி வட்ட காவல்துறை ஆய்வாளர் முனிகிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

புதன்கிழமை அன்று நடந்த விசாரணைக்கு பிறகு நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களனைவரும் 20 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள். குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை மேல் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்பு, அடையாள அணிவகுப்பு நடைபெறும். அதன்பிறகு வழக்கு தொடர்பான விபரங்கள் உங்ககளுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.