தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

‘காதி’யில் காந்திக்கு பதிலாக மோடி!

தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள டைரி மற்றும் சுவர் காலண்டர்களில் வழக்கமாக இடம் பெறும் காந்தியின் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடியின் படம்...

News image
Updated On :12 ஜனவரி 2017, 2:16 pm IST

மும்பை: தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள டைரி மற்றும் சுவர் காலண்டர்களில் வழக்கமாக இடம் பெறும் காந்தியின் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ள விவகாரம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் தேசிய தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் டைரி மற்றும் சுவர் காலண்டர்கள் வழங்கபடுவது வழக்கம். அவற்றில் எல்லாம் இதுவரை காந்தி ராட்டையில் நாள் நூற்கும் படம்தான் இடம் பெற்றிருக்கும்.ஆனால் இந்த முறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட டைரி மற்றும் சுவர் காலண்டர்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றிருந்தது.

தனது வழக்கமான பைஜாமா குர்தா அணிந்து வேறு ஒரு புதிய ராட்டையில் மோடி நூற்பது மாதிரியான படம் இடம் பெற்றிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தங்ககளது எதிர்ப்பை அமைதியாக காட்டும்  விதமாக வியாழனன்று மதிய உணவு இடைவேளையின் பொழுது தங்களது வாயில் கறுப்புத் துணியைக் கட்டிக்க கொள்வது என்று முடிவு செய்து அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.