பெங்களூரூ: தமிழகத்தின் ஜல்லிக்கட்டைப் போலவே நீதிமன்ற உத்தரவால் தடைபட்டுள்ள, கர்நாடகத்தின் பாரம்பரியமான கம்பளா எனப்படும் எருமைப் பந்தய விளையாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி பெங்களூருவில் இன்று போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெகுமக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதனை அடுத்து மாநில அரசு சார்பில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகத்தின் பாரம்பரியமான கம்பளா எனப்படும் எருமைப் பந்தய விளையாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுப் போராட்டம் போன்றே சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்கள் ஒன்றிணைந்து போராடத் தொடங்கி உள்ளனர். இதனால், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி தட்சிண கன்னட மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பெரும் பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மூடாபித்ரியில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் சுமார் 200 எருமைக் காளைகளுடன் திரண்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்து 4 கிமீ தூரம் பேரணியாகச் சென்று கடற்கரை பகுதியில் உள்ள கம்பளா டிராக்கில் போராட்டத்தை நிறைவு செய்தனர்.
இந்த மாபெரும் பேரணியின்போது கம்பளாவுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் முழக்கமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



