திருமணத்தை 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்: சட்ட ஆணையம்

அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் திருமணம் முடிந்த 30 நாட்களுக்குள் திருமணத்தைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சட்டம்
திருமணத்தை 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்: சட்ட ஆணையம்
Published on
Updated on
1 min read

புது தில்லி: அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் திருமணம் முடிந்த 30 நாட்களுக்குள் திருமணத்தைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சட்டம் இயற்றுமாறு சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அவ்வாறு திருமணம் நடந்த 30 நாட்களுக்குள் பதிவு செய்யாததற்கு, போதுமான காரணமின்றி தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், திருமணத்தை பதிவு செய்யாத தம்பதிகளுக்கு, திருமணச் சான்றிதழ் மூலம் கிடைக்கும் சலுகைகள் ஏதும் வழங்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் திருமணத்தைப் பதிவு செய்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

பிறப்பு இறப்பைப் பதிவு செய்வது போன்றே திருமணமும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இதன் மூலம் அமலில் உள்ள வெவ்வேறு திருமணச் சட்டங்கள் தொந்தரவு செய்யப்படாதது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணங்களை பதிவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கவேண்டும்.  ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதன் மூலம் திருமணம் செய்து ஏமாற்றுபவர்களை தடுக்க முடியும், கைவிடப்பட்ட பெண்களுக்கு கணவனிடமிருந்து உதவியை பெற்றுத் தரவும் இது உதவியாக இருக்கும் என்று சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

குழந்தை திருமணம், பெரியவள் மற்றும் பலதாரமணத்தை தடுக்கும் விதமாக, ஒரு சீரான சட்டத்தையும், அதற்கு தேவையான சீர்திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் சிபாரிசு செய்திருந்தது. சட்ட ஆணையத்திற்கு ஆதவாக 2006-இல் கட்டாய பதிவிற்கான ஒரு சட்டத்தை உருவாக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது.

"அந்த சட்டத்தின் மூலம் ஆரம்ப மற்றும் கட்டாய திருமணம் போன்ற நடைமுறைகளை நீக்குவதற்கு உதவும். இது பாலின சமத்துவத்தை அடைவதற்கும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் உதவியாக இருக்கும்" என்று கூறியிருந்தது.

மேலும், தனிப்பட்ட சட்டங்களை இயற்ற தலையிட அரசாங்கம் விரும்பவில்லை என தெளிவுபடுத்திய சட்டம் ஆணைக்குழு, அனைத்து பழக்கவழக்கங்கள் மற்றும் மதங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட திருமணங்களை உறுதிப்படுத்த விரும்புகிறது என தெரிவித்திருந்தது.

இதுகுறித்த சட்டங்களை இயற்றுவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட முடியாமல் போனது  குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com