அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது

குடியரசுத் தலைவர் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

News image
Updated On :20 ஜூலை 2017, 5:40 am

DIN


புது தில்லி: குடியரசுத் தலைவர் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

இதன் முடிவுகள் மாலை 5 மணிக்கு முன்னதாக வெளிவந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக அடுத்து பதவியேற்க போவது யார் என்பது குறித்தும் அப்போது தெரிந்துவிடும்.

குடியரசுத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை காலையில் 11 மணிக்கு தொடங்கியது.

முதலாவதாக, நாடாளுமன்ற இல்லத்தில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் திறக்கப்பட்டு, அதிலிருக்கும் வாக்குகள் எண்ணப்படும். அதன்பிறகு, பல்வேறு மாநிலங்களில் இருந்து அனுப்பப்பட்ட வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு, அதில் இருக்கும் வாக்குகள் எண்ணப்படும்.

வாக்குகள் 4 தனித்தனி மேஜைகளில் வைத்து எண்ணப்படும். சுமார் 8 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.

மாலை 5 மணிக்கு முன்பு முடிவு தெரிந்துவிடும்

முந்தைய 2 குடியரசுத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலை நடத்தியுள்ள தேர்தல் ஆணைய அதிகாரி கூறும்போது, தேர்தல் முடிவுகள் பொதுவாக 5 மணிக்குள் வெளிவந்துவிடும் என்றார்.

குடியரசுத் தலைவர் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பிகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மக்களவை முன்னாள் தலைவர் மீராகுமாரும் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலுக்காக, நாடாளுமன்ற இல்லத்தில் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதுதவிர்த்து, பல்வேறு மாநிலங்களில் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்தலில், 4,120 எம்எல்ஏக்களும், 776 எம்.பிக்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். சுமார் 99 சதவீத வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.