வாக்குப் பதிவு இயந்திர முறைகேடு: தன்னிச்சையாக நிரூபிக்கிறது ஆம் ஆத்மி
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று தன்னிச்சையாக நிரூபிக்கப்போவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.


மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று தன்னிச்சையாக நிரூபிக்கப்போவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அண்மையில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.
ஆம் ஆத்மி கட்சி ஒருபடி முன்னே சென்று, எவ்வாறு முறேகேடு செய்ய முடியும் என்பதை வாக்குப் பதிவு இயந்திரத்தை வைத்துக் கொண்டு தில்லி சட்டப் பேரவையில் செயல் விளக்கமளித்தது.
ஆனால், 'அக்கட்சி பயன்படுத்திய வாக்குப் பதிவு இயந்திரம் மாதிரி வாக்குப் பதிவு இயந்திரம்; தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரம் அல்ல' என்று தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்ததுடன் அந்தக் குற்றச்சாட்டையும் நிராகரித்தது.
மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியுமா? என்பதை வரும் 3-ஆம் தேதி நிரூபித்துக் காட்டுமாறு குற்றம்சாட்டிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது. அந்த சவாலை ஏற்பதாகவும், அதேநேரம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் மதர் போர்டை சோதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கோரியது.
ஆனால், அக்கட்சியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்ததுடன் சில நிபந்தனைகளையும் விதித்தது. இதன்காரணமாக, தேர்தல் ஆணையம் 3-ஆம் தேதி நடத்தவுள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஆம் ஆத்மி கட்சி பதிவு செய்துகொள்ளவில்லை.
அதேநேரம், வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்றும் அதேநாளில் தன்னிச்சையாக நிரூபித்து காட்டுவோம் என்றும் ஆம் ஆத்மி தில்லி பிரிவு செயலர் சுரப் பரத்வாத் வியாழக்கிழமை தெரிவித்தார்.
முன்னதாக, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் சவாலை ஏற்றுக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...