இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவுக்கு டாக்டர் பட்டம்: ஐஐடி கான்பூர்

பெண் தடகள வீராங்கனைகளுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தவரும், நம்ம வீட்டு குழந்தைகளே வேகமாக ஓடி வந்தா,
இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவுக்கு டாக்டர் பட்டம்: ஐஐடி கான்பூர்
Published on
Updated on
1 min read

பெண் தடகள வீராங்கனைகளுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தவரும், நம்ம வீட்டு குழந்தைகளே வேகமாக ஓடி வந்தா, "ஏன் இப்படி ஓடி வர.... பி.டி.உஷானு நினைப்பா?" என்ற வார்த்தையால் வர்ணிப்போம். அந்தயளவுக்கு அனைத்து மக்களின் மனங்களில் இடம் பெற்றவருமான கேரளாவைச் சேர்ந்த பி.டி. உஷா சர்வதேச அளவில் தடகள போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்த பிடி. உஷாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஐஐடி கான்பூர் முடிவுசெய்துள்ளது.

பல துறைகளில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி முன்மாதிரியாகத் திகழ்ந்து, அந்தத் துறையின் வளர்ச்சிக்காகப் பங்காற்றியவர்களுக்காக கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம். அதன்படி, ஐஐடி கான்பூர் தடகள விளையாட்டுகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தங்க மங்கை பி.டி.உஷாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவுசெய்துள்ளது.

அதன்படி, வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஐஐடி கான்பூரின் 50வது பட்டமளிப்பு விழா நடக்கயிருக்கிறது. இதில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு 16ஆம் தேதி பிடி உஷாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கயிருப்பதாக கூறப்படுகிறது. இது இவருக்கு கிடைக்கும் 2வது டாக்டர் பட்டமாகும். இதற்கு முன்னதாக கடந்த 2002 ஆம் ஆண்டு கன்னூர் பல்கலைக்கழகம் பிடி உஷாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய இளம் இளைஞர்களை பங்கேற்பதற்காகவும் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, தேசிய விளையாட்டு அபிவிருத்தி நிதியிலிருந்து ரூ.8.5 கோடி செலவில் கோழிக்கோடு அருகில் உள்ள கிணலூரில் கட்டப்பட்ட உஷா தடகளப் பள்ளியை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச அளவில் தடகளப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்த பி.டி. உஷா, இந்திய தடகளங்களின் அரசி, இந்தியாவின் தங்க மங்கை, பய்யொலி எக்ஸ்பிரஸ் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com