லாலு பிரசாத் குடும்பத்தினரின் சொத்துகள் முடக்கம்

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தின் மனைவி, மகன், மகள் உள்ளிட்டோருக்கு சொந்தமாக தில்லி, பாட்னாவில் உள்ள வீடு, நிலம் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை முடக்கினர்.
லாலு பிரசாத் குடும்பத்தினரின் சொத்துகள் முடக்கம்

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தின் மனைவி, மகன், மகள் உள்ளிட்டோருக்கு சொந்தமாக தில்லி, பாட்னாவில் உள்ள வீடு, நிலம் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை முடக்கினர்.
பினாமி பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வருமான வரித் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார், லாலுவின் மனைவியும் பிகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, லாலுவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், லாலுவின் மகள்கள் சாந்தா, ராகினி யாதவ் ஆகியோருக்கு சொந்தமாக தில்லி, பாட்னாவில் உள்ள நிலம் உள்ளிட்ட சொத்துகளை முடக்குவதாக வருமான வரித் துறை நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
லாலுவின் குடும்பத்தினர் பினாமிகளின் பெயரில் ரூ.1000 கோடி அளவுக்கு நிலம் உள்ளிட்ட சொத்துகளை வாங்கியதுடன் வரி ஏய்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
பாட்னாவில் மட்டும் 9 பெரிய மனைகளை வருமான வரித் துறையினர் முடக்கியுள்ளனர். இதில், ஓரிடத்தில் வணிக வளாகம் கட்ட லாலு குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். முடக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.9.32 கோடி என்று ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவற்றின் உண்மையான சந்தை மதிப்பு ரூ.180 கோடி வரை இருக்கும் என்று வருமான வரித் துறை கூறியுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித் துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.
அதில், பினாமிகளின் பெயரில் லாலு குடும்பத்தினர் தில்லியிலும், பாட்னாவிலும் அதிக அளவில் கட்டடங்கள், நிலத்தை வாங்கிக் குவித்தது தெரியவந்தது. இந்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறையும், பெரிய தொகை அபராதமாகவும் விதிக்கப்படும்.
முன்னதாக, "பாஜகவையும், மத்திய அரசையும் தங்கள் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருவதால் வருமான வரித் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை எங்கள் குடும்பத்தின் மீது ஏவி விடுகின்றனர். இதற்கு அஞ்சப்போவதில்லை. மத்திய அரசின் மோசமான செயல்பாடுகள் தொடர்ந்து எதிர்ப்பேன்' என்று லாலு பிரசாத் கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com