தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரமலான் கொண்டாட்டத்தில் யோகி ஆதித்யநாத் பங்கேற்காதது ஏன்? அகிலேஷ் யாதவ் கேள்வி

லக்னொவில் திங்கள்கிழமை நடைபெற்ற ரமலான் கொண்டாட்டத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்காதது ஏன்? என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பியுள்ளார்.

News image
Updated On :26 ஜூன் 2017, 6:54 pm

DIN

லக்னொவில் திங்கள்கிழமை நடைபெற்ற ரமலான் கொண்டாட்டத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்காதது ஏன்? என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை இதுவரை ஆண்ட அனைத்து முதல்வர்களும் ரமலான் தினத்தன்று ஈத்கா மைதானத்துக்குச் (சிறப்புத் தொழுகை நடைபெறும் இடம்) சென்று பார்வையிடுவது வழக்கம். இந்த ஆண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கண்ட நடைமுறையைக் கடைப்பிடிக்கவில்லை. எனினும், துணை முதல்வர் தினேஷ் சர்மா லக்னௌவிலுள்ள ஈத்கா மைதானத்துக்குச் சென்றார்.
இதேபோல், மாநில ஆளுநர் ராம் நாயக்கும் ஈத்கா மைதானத்துக்குச் சென்றார்.
இந்நிலையில், லக்னௌவிலுள்ள ஈத்கா மைதானமொன்றில் நடைபெற்ற தொழுகையில் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முன்னாள் முதல்வராகிய நான் இங்கு தொழுகையில் பங்கேற்றுள்ளேன். ஆனால், முதல்வர் யோகி ஆதித்யநாத் ரமலான் கொண்டாட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? என்பதை அவர் விளக்க வேண்டும் என்றார்.
யோகி ஆதித்யநாத் ஈத்கா மைதானத்துக்குச் செல்லவில்லை என்றபோதிலும், ரமலானையொட்டி முஸ்லிம்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.