தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சமூக நல திட்டங்களுக்கான ஆதார் இணைப்புக்கு தடை கிடையாது : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! 

சமூக நல திட்டங்களுக்கு பயனாளர்கள் தங்கள் ஆதார் அட்டை விபரங்களை பதிவு செய்து கொள்ள  வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :27 ஜூன் 2017, 6:45 am

DIN

புதுதில்லி: சமூக நல திட்டங்களுக்கு பயனாளர்கள் தங்கள் ஆதார் அட்டை விபரங்களை பதிவு செய்து கொள்ள  வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாடு முழுவதும் மத்திய அரசின் சார்பில் செயல்படும் நலத்திட்டங்களுக்கும், நேரடி மானிய பரிமாற்றம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் ஆதார் அட்டை விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.அத்துடன் அவ்வாறு இணைத்துக் கொள்வதற்கு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி கடைசித் தேதி என்றும் அறிவித்து இருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவ்வாறு மத்திய அரசு கோருவது சட்ட விரோதம் என்றும், இந்த உத்தரவுக்கு    தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வானது, மத்திய அரசின் உத்தரவில் எந்த தவறும் இல்லை  என்று கூறி, அதற்கு தடை விதிக்கமுடியாது என்று தீர்ப்பளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.