தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஜவுளி ஏற்றுமதியில் வெல்ல வேண்டிய தருணமிது: பிரதமர் மோடி

ஜவுளித் துறையில் நமது நாடு கவனம் செலுத்தி, ஜவுளி ஏற்றுமதியில் வெற்றி பெற வேண்டிய தருணம் வந்துவிட்டது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

News image
குஜராத் மாநிலம், காந்திநகரில் வெள்ளிக்கிழமை 'ஜவுளி இந்தியா 2017' கண்காட்சியைத் தொடங்கி வைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையைப் பார்வையிடுகிறார் பிரதமர் மோடி.
Updated On :30 ஜூன் 2017, 8:39 pm

DIN

ஜவுளித் துறையில் நமது நாடு கவனம் செலுத்தி, ஜவுளி ஏற்றுமதியில் வெற்றி பெற வேண்டிய தருணம் வந்துவிட்டது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம், காந்தி நகரில் இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளிக் கண்காட்சியை மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து, 'ஜவுளி இந்தியா 2017' கருத்தரங்கைத் தொடங்கி வைத்து மோடி பேசியதாவது:
ஜவுளித் துறையில் கவனம் செலுத்தி மிகப் பெரிய அளவில் ஜவுளி ஏற்றுமதியில் நாம் ஈடுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது. வேறுபட்ட கலாசாரம், பாரம்பரியத்தைக் கொண்டது நமது தேசம். இந்த வேற்றுமை ஜவுளித் துறையில் மிகத் தெளிவாக பிரதிபலிக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் உடுத்தும் வேறுபட்ட ஆடைகள் குறித்து ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும். அதேபோல், அனைத்து மாநிலங்களிலும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள், ஆடை உற்பத்தியாளர்களையும், வர்த்தகர்களையும் ஒரே சங்கிலியில் பிணைக்க வேண்டும். ஆடைத் தயாரிப்பு நிலையிலிருந்து ஏற்றுமதி வரை அவர்களின் தலையீடு இருக்க வேண்டும்.
உலகில் மக்கள் எந்த விதமான ஆடைகளை விரும்புகிறார்கள் என்பதையும், அவ்வப்போது ஆடை வடிவமைப்பில் ஏற்பட்டுவரும் புதுமைகள் ஆகியவற்றையும் கண்காணித்து செயல்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்றார் மோடி.
இந்தக் கருத்தரங்கத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அந்தத் துறையின் இணை அமைச்சர் அஜய் டம்டா, ரேமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கௌதம் சிங்கானியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.