புதுதில்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாலயோகி கலையரங்கத்தில் நாளை மாலை இரு அவையைச் சேர்ந்த உறுப்பினர்களுக்காக, பாலிவுட் நடிகர் அமீர்கானின் 'டங்கல்' திரைப்படம் திரையிடபட உள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற செயலாளர் அனூப் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவர்களின் முன் முயற்சியினால், பிரபல நடிகர் அமீர்கான் நடித்த திரைப்படமான 'டங்கல்' நாளை மாலைஇரண்டு அவையைச் சேர்ந்த உறுப்பினர்களுக்காக திரையிடப்பட உள்ளது.
நாளை இரண்டு அவைகளின் செயல்பாடுகள் முடிந்தவுடன் மாலை 6.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாலயோகி கலையரங்கத்தில் திரையிடல் நடைபெற உள்ளது. மகளிர் முன்னேற்றம் தொடர்பான ஒரு நல்ல கருத்து சொல்லியிருக்கும் இந்த திரைப்படத்தை பார்ப்பதன் மூலம், அது தொடர்பான பணிகளை உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் செய்யலாம் என்பதும் திரையிடலுக்கான ஒரு காரணமாகும். இதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற செயலகத்தின் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டங்கல் திரைப்படமானது மல்யுத்த வீரன் ஒருவன் எவ்வாறு தனது இரண்டு பெண்களையும் மல்யுத்த துறையில் பயிற்சி கொடுத்து பதக்கம் வெல்லும் வீரங்கனைகளாக மாற்றுகிறான் என்பதை பற்றி பேசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


