கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கொளுத்தும் வெயிலில் அதிகம் பாதிக்கப்படும் 10 மாவட்டங்கள்: விரிவான அலசல்

இந்தியாவில் கடந்த ஆண்டு பருவ மழை ஏமாற்றியதைப் போல கோடை வெயில் ஏமாற்றவில்லை. வெளுத்து வாங்கி வருகிறது. 

News image
Updated On :22 மே 2017, 9:14 am

DIN


சென்னை: இந்தியாவில் கடந்த ஆண்டு பருவ மழை ஏமாற்றியதைப் போல கோடை வெயில் ஏமாற்றவில்லை. வெளுத்து வாங்கி வருகிறது. 

இன்றைக்கு பயங்கர வெயில் என்று நாம் தினமும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், இந்தியாவில் அதிகம் வெயில் கொடுமைக்கு உள்ளாகும் மாவட்டங்கள் குறித்து இந்தியாவில் வெப்ப தாக்குதலுக்கு உள்ளாகும் மாவட்டங்களின் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் மனிதர்களின் வயது, மதம், வருமானம், சுகாதாரம், பச்சை பசுமை நிறைந்த பகுதி ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு, மக்களின் வெப்பத்தை தாங்கும் சக்தி கணக்கப்பட்டுள்ளது. 707 மாவட்டங்களில் 640 மாவட்டங்களைக் கணக்கெடுத்ததில் 10 மாவட்டங்கள் மிக அதிக அபாயம் நிறைந்தவையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 

Story image

இதில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் 4 மாவட்டங்களும், மற்றவை சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவையும் அடங்கும். இதில் 20 மாவட்டங்கள் வெயிலின் தாக்கம் மிகவும் குறைந்தவையாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அவை, கேரளா, கோவா, யூனியன் பகுதியான லட்சத்தீவுகளைச் சேர்ந்தவையாகும்.

இந்த பட்டியல், சர்வதேச சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரம் குறித்த ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர்களான குல்ரெஸ் ஷா அஸார் மற்றும் ஜைமி மட்ரிஜோ கூறுகையில், அதிக வெப்பம் மட்டுமே இந்த கணக்கெடுப்பில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதிக வெப்பம் இருந்தாலும் பல மாவட்டங்களில் அதனை தாங்கும் அளவுக்கு பல காரணிகள் மக்களுக்கு பலமாக இருக்கிறது.

குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அற்ற சில மாவட்டங்களில் வெயில் குறைவாக இருந்தாலும் கூட, வெயில் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாகவே இருக்கிறது. எனவே, பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்தே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த 2015ம் ஆண்டில் மற்ற எந்த இயற்கைப் பேரிடர்களைக் காட்டிலும் வெயில் காரணமாக மட்டும் 2,400 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய உள் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுபோன்றதொரு பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதன் மூலம், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு உடனடியாக சுகாதார மற்றும் அடிப்படைத் தேவைகளை அளித்து, வெப்பத்தால் உயிர்பலி ஏற்படாமல் தடுக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.