விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசுப் பள்ளியில் பிஸ்கட் சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு: 45 பேர் கவலைக்கிடம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு நடத்தும் உறைவிடப் பள்ளியில், பிஸ்கட் சாப்பிட்ட சுமார் 100 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 9:58 pm

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு நடத்தும் உறைவிடப் பள்ளியில், பிஸ்கட் சாப்பிட்ட சுமார் 100 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து, 55 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 45 பேரது நிலைமை கவலக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த மாநிலத்தின் பதோஹி நகரில் உள்ள தீனதயாள் உறைவிடப் பள்ளியில் புதன்கிழமை அளிக்கப்பட்ட பிஸ்கட்டை சாப்பிட்ட சுமார் 100 மாணவர்களுக்கு வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டது.
அதையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் புதன்கிழமை இரவு அவசர அவசரமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்த மாணவர்களில் 55 பேர் மருத்துமனையில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 45 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளி முதல்வர் நீக்கம்: இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வரை பணியிடை நீக்கம் செய்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷாக் ஜி தெரிவித்தார். 
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதுமட்டுமன்றி, இந்தச் சம்பவம் தொடர்பாக உறைவிடப் பள்ளிக்கு உணவுப் பொருள்களை விநியோகிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் குமார் குப்தாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விஷாக் தெரிவித்தார்.
தரமற்ற உணவுப் பொருள்கள் குறித்து கடந்த ஓர் ஆண்டாக புகார்கள் குவிந்தும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட சமூக நலத் துறை அதிகாரி மீதும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.