குஜராத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கூடாரம் காலியாகும்: பாஜக எம்.பி.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியான பிறகு, காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர்கள் பலர் வெளியேறுவார்கள் என்று பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் கூறியுள்ளார்.
Published on

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியான பிறகு, காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர்கள் பலர் வெளியேறுவார்கள் என்று பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் கூறியுள்ளார்.
இதுகுறித்து "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அனுராக் தாக்குர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். அக்கட்சியில் நிலவி வரும் அடிமைக் கலாசாரத்தால் அவர்களுக்கு மனதளவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியிலிருந்து விலகுவதற்கு அவர்கள் தக்கத் தருணத்தை எதிர்பார்த்து வருகிறார்கள். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியான பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் அக்கட்சியிலிருந்து வெளியேறுவார்கள்.
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுப்பேற்பார் எனக் கூறப்பட்டு வருகிறது. அவ்வாறு, அக்கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்பேற்றுக் கொண்டாலும், அக்கட்சியின் எதிர்காலத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. "காங்கிரஸ் அல்லாத இந்தியா' என்ற பாஜகவின் நோக்கம், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிஜமாகும்.
காங்கிரஸில் உள்கட்சி ஜனநாயகம் துளியும் இல்லை. எந்தக் கருத்தையும், விமர்சனத்தையும் ஏற்கும் நிலையிலும் காங்கிரஸ் கட்சி இல்லை. 
அழிவின் விளம்பில் இருக்கும் அக்கட்சி, சிறிதளவேனும் ஜனநாயக மாண்புகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இல்லையெனில், அதனால் நிலைத்து நிற்க முடியாது என அந்தப் பேட்டியில் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com