புதுதில்லி: ஜியோ பிரைம் உறுப்பினர்கள் ரூ.399-ம், அதற்கு அதிகமாகவும் செய்யும் ரீசார்ஜுகளுக்கு அட்டகாசமான கேஷ்பேக் சலுகைகளை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது
ஜியோ சிம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள், ஒரே முறை கட்டணமாக ரூ.99-ஐ செலுத்துவதன் மூலம் ஜியோ பிரைம் உறுப்பினர் ஆக இயலும். அவ்வாறு இணைந்து கொள்பவர்களுக்கு அந்நிறுவனம் சிறப்பான சலுகைகளை வழங்கி வருகிறது
தற்பொழுது ரூ.399-ம் அதற்கு மேலும் செய்யப்படும் ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் ரூ.2,599 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இந்த சலுகையானது ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது .
இது பற்றி அந்நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:
ஜியோ பிரைம் கேஷ் பேக் சலுகை நவம்பர் 10 முதல் 25-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டுமே அளிக்கப்படும். இந்த கேஷ்பேக் சலுகையில் 3 பிரிவுகள் உள்ளன. அதன்படி (1) ரூ. 400 கேஷ் பேக் சலுகையானது (ரூ. 50 x 8) மதிப்பிலான ஜியோ கேஷ்பேக் நவம்பர் 15 முதல் மைஜியோ-வில் கிடைக்கப்பெறும்.
2. அமேசான் பே, ஆக்சிஸ் பே, ஃப்ரீசார்ஜ், மொபிக்விக், பேடிஎம் மற்றும் போன்பே ஆகிய இ-வாலட்டுகள் மூலமாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.300 கேஷ்பேக் சலுகை உடனடியாக வழங்கப்படும். (3) . இ-காமர்ஸ் வவுச்சர்கள் நவம்பர் 20-ம் தேதி முதல் கிடைக்கப்பெறும்
இவ்வாறு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


