அருண் ஜேட்லியை முதலில் பதவியிலிருந்து நீக்க வேண்டும்: கொந்தளிக்கும் யஷ்வந்த் சின்ஹா!
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை முதலில் அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சரான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.


பாட்னா: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை முதலில் அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சரான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு தொடர்பாக பீகார் மாநில முன்னாள் சபாநாயகர் உதய் நாராயண் இன்று அம்மாநில தலைநகர் பாட்னாவில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்து கொண்ட யஷ்வந்த சின்ஹா நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை அமலுக்கு கொண்டுவந்த போது அதனை நிதியமைச்சர் ஜேட்லி முழுமையாக மனதினில் ஏற்றிக்கொள்ளவில்லை. எனவேதான் ஒவ்வொரு நாளும் மாற்றி பேசிக் கொண்டே இருக்கிறார். எனவே தகுதியில்லாத அவரை நீக்கி விட்டு புதிய அமைச்சரை பிரதமர் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...