மேற்கு வங்க முதல்வரைச் சந்திக்க கமல் திட்டம்!
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியைச் சந்திக்கவுள்ளார்...


கடந்த சில மாதங்களாக அரசியல் களம் குறித்து விமர்சித்து வரும் கமல்ஹாசன், தீவிர அரசியலில் இறங்கப் போவதாகவும், தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இதையடுத்து கட்சி தொடக்கப் பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது. நற்பணி மன்ற இயக்க நிர்வாகிகளுடன் அவ்வப்போது கலந்து ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில் கமல், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியைச் சந்திக்கவுள்ளார். இதற்காக இன்று காலை கொல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
கொல்கத்தா சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் கமல், இன்று மாலை மம்தா பானர்ஜியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...