சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பணவீக்க விகிதம் டிசம்பருக்குள் குறையும்

வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பண வீக்க விகிதம் குறையும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் கூறினார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:46 pm

DIN

வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பண வீக்க விகிதம் குறையும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் கூறினார்.
ஹைதராபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
உணவுப் பொருள்களின் விலைவாசி அதிகரிப்பது முடிவுக்கு வரும் காலம் இதுவென்று கருதுகிறேன். பருவமழை நன்றாகப் பெய்து, விளைச்சல் அதிகரித்துள்ளது. எனவே, அடுத்த மாதத்தில் இருந்து உணவுப் பொருள்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. அதன்படி, பணவீக்க விதிகம் 4 சதவீதத்துக்கு கீழ் குறையும் என்றார் அவர்.
ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த அக்டோபர் மாதம், உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்தது. வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதனால், பணவீக்க விகிதம் 3.58 சதவீதம் அதிகரித்தது. இந்நிலையில், அது, அடுத்த மாத இறுதியில் 4 சதவீதத்துக்கும் கீழே குறையும் என்று சி.ரங்கராஜன் கணித்துள்ளார்.
முன்னதாக, கருத்தரங்கில் அவர் பேசுகையில், ''உணவுப் பொருள்களின் உற்பத்தியாளர் என்ற முறையில், அரசின் பங்கு அதிகரித்துள்ளது; கல்வி, மருத்துவம் போன்று மக்களுக்குத் தேவையானவற்றை வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு அதிகரித்துள்ளது'' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.