'பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்ற நினைத்தால் யாரும் தடுக்க முடியாது'
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற வேண்டுமென்று இந்தியா நினைத்துவிட்டால் அதனை எவராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர்


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற வேண்டுமென்று இந்தியா நினைத்துவிட்டால் அதனை எவராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர் தெரிவித்துள்ளார்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. முந்தைய அரசுகள் செய்த தவறுகளால் அப்பகுதி இப்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்பகுதியைக் கைப்பற்ற வேண்டுமென்று நாம் (இந்தியா) நினைத்துவிட்டால், அதனை எவராலும் தடுக்க முடியாது. பாகிஸ்தானிடம் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார் அஹீர்.
முன்னதாக, சில நாள்களுக்கு முன்பு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவிக்கையில், 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானின் ஒரு பகுதியாகும். மறுபக்கம் இருக்கும் பகுதி, இந்தியாவுக்குச் சொந்தமானதாகும். இந்தியாவும், பாகிஸ்தானும் எத்தனை ஆண்டுகள் போரிட்டாலும், இந்த நிலைமை மாறாது' என்று கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...