மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட ‘பத்மாவதி’ திரைப்பட வெளியீடு! 

எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதன் காரணமாக பத்மாவதி திரைப்பட வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2017, 11:39 am

DIN

மும்பை: எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதன் காரணமாக பத்மாவதி திரைப்பட வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

ராஜபுத்திர ராணி சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில்   பிரபல நடிகை தீபிகா படுகோனே 'பத்மாவதி' கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முதலில் இந்தப்படம் டிசம்பர் 1-ந்தேதி திரைக்கு வருவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்த பொழுது பத்மாவதி படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கினர். நடிகை தீபிகா படுகோனேவிற்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. அதேசமயம் பத்மாவதி படத்தை திரையிட ராஜஸ்தான், உத்தர பிரதேச அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இந்நிலையில் ‘பத்மாவதி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் தேதி குறிப்பிடாமல் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்து உள்ளது. தானாக முன்வந்து இம்முடிவை எடுத்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. சட்ட விதிகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்து உள்ள தயாரிப்பு நிறுவனம் வரும் நாட்களில் திரைப்படத்தை வெளியிடும் தேதியை அறிவிப்பதாக குறிப்பிட்டு உள்ளதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.