தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் பத்தில் ஒன்று போலி: அதிர வைத்த ஆய்வறிக்கை! 

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளில் பத்தில் ஒன்று போலியானது ...

News image
Updated On :29 நவம்பர் 2017, 9:21 am

DIN

புதுதில்லி: குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளில் பத்தில் ஒன்று போலியானது என உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

உலக சுகாதார அமைப்பானது உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையாகும் பல்வேறு விதமான மருந்துகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்பொழுது வெளியாகியுள்ள ஆய்வறிக்கை ஒன்றில்தான் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில்  விற்பனை செய்யப்படும்  மருந்துகளில் 10.5 சதவீத மருந்துகள் போலியானவையாகும்.

இந்த மருந்துகள் யாவும் நோய்களை முறையாக குணப்படுத்தவோ அல்லது தடுக்கவோ தவறி விடுகின்றன. இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் மலேரியா மற்றும் நிமோனியா போன்ற நோய்களிலிருந்து மரணமடையும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்புகளுக்கு இம்மருந்துகளே காரணமாக உள்ளது.

வளர்ந்த  நாடுகளில்  கிடைக்கும் மருந்துகள் தரமானதாக இருந்தாலும் அது நோய்களை முழுவதும் குணப்படுத்துவது கிடையாது. கடந்த நான்கு ஆண்டுகளில்  உலக சுகாதார அமைப்பானது புற்றுநோய் மருந்துகளில் துவங்கி கருத்தடை வரை, நுண்ணுயிர் எதிர்ப்பிகளில்  இருந்து தடுப்பூசிகள் வரை  எல்லாவற்றையும் உள்ளடக்கிய பிரிவுகளிலும்  தரக்குறைவான அல்லது போலியான மருத்துவ பொருட்கள் பற்றிய முழுமையான அறிக்கையை பெற்றுள்ளது.

இந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் கெபிரேயஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.