அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்: ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும், சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரும் உயிரிழந்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 7:28 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும், சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டிய கிருஷ்ணாகாடி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். திடீரென நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும், சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரும் உயிரிழந்தனர். நமது ராணுவ வீரர்கள் அவர்களுக்கு உரிய பதிலடி
கொடுத்தனர் என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
முன்னதாக, இதே பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 4-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். கடந்த 3-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர், 2 சிறார்கள் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர்
எல்லைப் பகுதிகளில் நடத்திவரும் தாக்குதல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.