ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மாட்டிறைச்சி கடத்தியதாக சந்தேகம்: மாற்றுத் திறனாளியை உயிருடன் எரிக்க முயன்ற கொடூரம்! 

ஹரியாணா மாநிலத்தின் பரிதாபாத்தில் மாட்டிறைச்சி கடத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் மாற்றுத் திறனாளி ஒருவரை உயிருடன் எரிக்க முயன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது

News image
Updated On :15 அக்டோபர் 2017, 9:21 am

பரிதாபாத்: ஹரியாணா மாநிலத்தின் பரிதாபாத்தில் மாட்டிறைச்சி கடத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் மாற்றுத் திறனாளி ஒருவரை உயிருடன் எரிக்க முயன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது

வட மாநிலங்களில் தொடர்ச்சியாக பசு வதை கண்காணிப்பாளர்கள் என்ற பெயரில் மாட்டிறைச்சி பயன்படுத்துவோருக்கு எதிரான தாக்குதல் போக்கு அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பரிதாபாத்தில் மாற்றுத்திறனாளியான இஸ்லாமிய வாலிபரான ஆசாத் என்பவர் வாடகைக்கு ரிக்ஷா ஓட்டி வாழ்ந்து வருகிறார். அங்குள்ள இறைச்சி கடைக்காரர் ஒருவரிடம் ஆசாத் வாடகைக்கு ரிக்ஷா ஓட்டுவது வழக்கம்.

நேற்று இவர் தனது வாடிக்கைப்படி ரிக்ஷா ஓட்டிச் சென்ற போது 2 பேர் வழி மறித்துள்ளனர். நீ மாட்டிறைச்சி கடத்துகிறாயா என்று கேட்டு அவரிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு காவல் நிலையம் சென்று சோதனையிடலாம் வாருங்கள் என்று ஆசாத்  கூறியுள்ளார்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த அவர்கள் இருவரும் தங்கள் செல்போனில் பேசி மேலும் சிலரை வரவழைத்தனர். பின்னர் அந்த கும்பல் சேர்ந்து வாலிபர் ஆசாத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த ஆசாத்  மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்க அவர்கள் முயன்றுள்ளனர்.

ஆனால் தீக்குச்சியை அவர்கள் உரசிய போது ரோந்து போலீஸ்காரர் ஒருவர் அந்த பக்கமாக வந்துள்ளார். அவரைக் கண்டவுடன் தாக்கியவர்கள் தப்பித்து ஓடி விடவே, ஆசாத் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஆசாத் தற்பொழுது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடியவர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.