ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

லிட்டர் லிட்டராக பெட்ரோல் திருடிக் குடிக்கும் அதிசய குரங்கு! (விடியோ இணைப்பு) 

ஹரியாணா மாநிலம் பானிபட்டில் குரங்கு ஒன்று வாகனங்களிலிருந்து பெட்ரோலினைத் திருடிக் குடிக்கும் காட்சிகள் கொண்ட விடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது 

News image
Updated On :20 அக்டோபர் 2017, 9:18 am

பானிபட் (ஹரியாணா): ஹரியாணா மாநிலம் பானிபட்டில் குரங்கு ஒன்று வாகனங்களிலிருந்து பெட்ரோலினைத் திருடிக் குடிக்கும் காட்சிகள் கொண்ட விடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது 

ஹரியானா மாநிலம் பானிபட் நகரில் உள்ள கடைத்தெரு ஒன்றில் வாகனங்களை பார்க்கிங் செய்ய என்று அரை ஏக்கர் அளவில் தனியாக இடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக அதில் நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் அடிக்கடி பெட்ரோல் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன உரிமையாளர்கள் அதனை பராமரிக்கும் நபர் மீது காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்திய பின் அவர் தவறு  செய்யவில்லை என்று போலீசாருக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.  அத்துடன் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பார்க்கிங் பகுதியில் பொருத்தப்பட்டன.

இருந்தபோதும் பெட்ரோல் திருட்டுக்கு ஒரு முடிவுக்கு வரவில்லை. தற்பொழுது அங்குள்ள  குரங்கு ஒன்றுதான்  இருசக்கர வாகனங்களிலிருந்து பெட்ரோல் திருடிக் குடிப்பது தெரியவந்தது.

Story image

அதனைக் கூடி  இருந்தோர் தடுக்க முயற்சித்தும் அக்குரங்கு அதனைக் கண்டு கொள்ளாமல் பெட்ரோலினை சுகமாகக் குடிக்கிறது. அத்துடன் அதற்கு பிஸ்கெட்டுகள் உள்ளிட்ட பண்டங்கள் போடப்பட்டாலும் அதனைக் கவனிக்காமல் அது பெட்ரோல் குடிப்பதிலேயே ஆர்வமாக இருக்கிறது.

Story image

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. விடியோ ஒன்றும் இணையத்தில் உலா வருகிறது.

விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.