பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

முத்திரைத்தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கி மரணம்: காவல்துறை அறிவிப்பு

உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்திரைதாள் மோசடி வழக்கில் கைதான அப்துல் கரீம் தெல்கி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்

News image
Updated On :26 அக்டோபர் 2017, 12:32 pm


பெங்களூர்: உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்திரைதாள் மோசடி வழக்கில் கைதான அப்துல் கரீம் தெல்கி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்

பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அப்துல் கரீம் தெல்கி மரணம் அடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

2001-இல் முத்திரைதாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெலகாவியைச் சேர்ந்த அப்துல் கரீம் தெல்கிக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.202 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

கடந்த 16 ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்த அப்துல் கரீம் தெல்கிக்கு கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டெல்கியின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் இன்று மரணம் அடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.