டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இந்தூர் கோடவுனில் தீ விபத்து: எரிந்து கருகிய 400 இருசக்கர வாகனங்கள்!

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள கோடவுன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 400 இருசக்கர வாகனங்கள் எரிந்து கருகிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

News image
Updated On :29 அக்டோபர் 2017, 9:34 am

DIN

போபால்: மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள கோடவுன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 400 இருசக்கர வாகனங்கள் எரிந்து கருகிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்று இந்தூர். இங்குள்ள அக்ராசென் சவுராஹா பகுதியில் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் சில கடைகள் இயங்கி வருகின்றன. அவை வாகனங்களை நிறுத்தி வைக்கும் கோடவுனாகவும் செயல்படுகின்றன.

இந்நிலையில் இன்று அதிகாலை அங்குள்ள கடை ஒன்றில் திடீரென தீ பிடித்தது. இந்த தீயானது அருகிலிருந்த மற்ற கடைகளைக்கும் பரவியது.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சிரமப்பட்டு போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அங்குள்ள கடைகளில் இருந்த சுமார் 400 இருசக்கர வாகனங்கள் நாசம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.