உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தண்ணீர் பிரச்னைதான் எதிர்காலத் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும்: நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி

தண்ணீர் பிரச்னைகள்தான் எதிர்கால தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விளங்கப் போகிறது என்று மத்திய கொள்கைக் குழு (நீதிஆயோக்) தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்

News image
Updated On :5 செப்டம்பர் 2017, 7:43 pm

DIN

தண்ணீர் பிரச்னைகள்தான் எதிர்கால தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விளங்கப் போகிறது என்று மத்திய கொள்கைக் குழு (நீதிஆயோக்) தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக சபை (சிஐஐ) சார்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நீர்வள மேலாண்மை கருத்தரங்கில் பங்கேற்ற அவர் இதுதொடர்பாக பேசியதாவது:
உலக அளவில் இந்தியாவில்தான் விவசாயத்துக்கு கூடுதலாக தண்ணீர் பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கிராம் தானியங்களை விளைவிக்க சீனா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தும் தண்ணீரைக் காட்டிலும் இந்தியாவில் 3 சதவீதம் அதிகமாகச் செலவிடப்படுகிறது.
தண்ணீர் என்பது அதிமுக்கியமான இயற்கை வளம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நிர்ணயிக்கும் சக்தியாக தண்ணீர் விளங்குகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை நீர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பஞ்சார், ஹரியாணா, தில்லி போன்ற மாநிலங்களில் தண்ணீர் பயன்பாட்டில் எந்த ஒழுங்குமுறையும் இல்லை. அதன் காரணமாகவே, அந்த மாநிலங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறத் தொடங்கியுள்ளன.
வறட்சி சூழலை நோக்கி நாடு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அதற்குள்ளாக நீர் மேலாண்மைத் திட்டங்களை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த வேண்டிய சவால்கள் நம் முன்னே உள்ளன.
எதிர்காலத்தில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் சக்தியாக தண்ணீர் பிரச்னைகள் உருவெடுக்கப் போகின்றன. நீர் மேலாண்மைத் திட்டங்களை திறம்பட மேற்கொள்பவர்களே ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்ற நிலை உருவாகும்.
தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காணாத ஆட்சியாளர்கள் தோல்வியைச் சந்திப்பார்கள் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.