சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ராணுவ வீரரை நடுரோட்டில் சரமாரியாக அறைந்த பெண் கைது: வீடியோ

தில்லியில் ராணுவ வீரரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக அறைந்த வீடியோ காட்சி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாக

News image
Updated On :16 செப்டம்பர் 2017, 4:51 am

DIN

புதுதில்லி:  தில்லியில் ராணுவ வீரரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக அறைந்த வீடியோ காட்சி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாக வைரலான நிலையில், அந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அந்த பெண் சில மணி நேரங்களிலேயே ஜாமினில் வெளியே வந்தார்.

கடந்த சினிக்கிழமை தெற்கு தில்லி வசந்த் கஞ்ச் பகுதியில், ராணுவ வீரர்கள் சென்ற டிரக்கை வழிமறித்து தனது காரை நிறுத்திய 44 வயதான பெண் ஒருவர், டிரக்கை ஓட்டிவந்த ராணுவ வீரர் ஜேசிஒ மகாவீர் சிங்கை சரமாரியாக அறைந்தார். இது தொடர்பாக மற்ற வீரர்கள் கேட்டபோது, தனது டாடா இன்டிகா காரை உரசுவதுபோல், டிரக்கை ஓட்டிவந்ததாக குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், குர்கானில் வசிக்கிற ஸ்மிருதி கல்ரா என்ற அந்த பெண் ராணுவ வீரரை அடித்த காட்சி செல்போனில் படம்பிடிக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து, போலீஸார் அந்த பெண்ணை கைது செய்தனர். அவரது காரையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட ஸ்மிருதி கல்ரா, சில மணி நேரங்களிலேயே ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

பட்டதாரி பெண்ணான ஸ்மிருதி கல்ரா, 1995 -ஆம் ஆண்டு ராணுவ அதிகாரியின் மகனுடன் திருமணம் செய்து கொண்டார். 2008-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.