சுடச்சுட

  

  எஸ்பிஐ வங்கியின் விருப்ப ஓய்வுத் திட்டம்:  2,800 பேர் மட்டுமே ஏற்பு

  Published on : 04th April 2017 05:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sbi

  மும்பை: பாரத ஸ்டேட் வங்கியுடன் (எஸ்பிஐ) அதன் 5 துணை வங்கிகள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வங்கிகளின் ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள விருப்ப ஓய்வுத் திட்டத்தை ஏற்று, 2,800 பேர் மட்டுமே ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ளதாக எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
  இணைக்கப்பட்ட துணை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 12,500 ஊழியர்களுக்கு எங்களது விருப்ப ஓய்வு திட்டத்தில் பங்கேற்பதற்கான தகுதி இருப்பினும், இதுவரை 2,800 ஊழியர்கள் மட்டுமே அந்தத் திட்டத்தை ஏற்று, ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
  வரும் புதன்கிழமை வரை (ஏப். 5) ஊழியர்கள் இந்தத் திட்டத்தில் பலனடையலாம் என்றார் அவர்.
  எஸ்பிஐ-யின் துணை வங்கிகளான பைகானூர் - ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, ஹைதராபாத் ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, பட்டியாலா ஸ்டேட் வங்கி, திருவாங்கூர் ஸ்டேட் வங்கி ஆகியவை இந்த மாதம் 1-ஆம் தேதி பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன.
  இதையடுத்து, எஸ்பிஐ ஊழியர்களின் எண்ணிக்கை 2,00,820-இலிருந்து 2,70,011-ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், துணை வங்கிகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி, 55 வயது பூர்த்தியானவர்கள் விருப்ப ஓய்வு பெறுவதற்கான திட்டத்தை எஸ்பிஐ அறிவித்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai