சுடச்சுட

  

  ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உணவு குறித்து புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய வீரர் பணி நீக்கம்

  By DIN  |   Published on : 19th April 2017 03:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bsf_food


  புது தில்லி: எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் தரமற்ற உணவு குறித்து விடியோ மூலமாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய வீரர் தேஜ் பகதூர் யாதவ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், போதுமான உணவு வழங்கப்படுவதில்லை என்றும் விடியோ மூலம் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விடியோ சமூக தளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இந்த நிலையில், தவறான குற்றச்சாட்டுகளை கூறியதாக, தேஜ் பகதூர் யாதவ், எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  அவர் மீது ராணுவ ஊழியர்களுக்கான விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை நடப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

  ராவ் பகதூர் யாதவ் வெளியிட்ட விடியோவைத் தொடர்ந்து, இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படையும், மத்திய உள்துறை அமைச்சகமும் விரிவான அறிக்கை அளிக்கும்படி பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டிருந்தது.

  மேலும், ராணுவ வீரர்களுக்கு தரமான உணவு சமைக்கப்படுவதையும், அவர்களுக்கு போதுமான அளவுக்கு வழங்கப்படுவதையும் உயர் அதிகாரிகள் மேற்பார்வை செய்து உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கூறி தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இது தொடர்பாக வந்த பல்வேறு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், பாராமிலிட்டிரிப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai